news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவை விட இந்தியர்களை அதிகம் வெளியேற்றும் கனடா
tv

Also Watch

அமெரிக்காவை விட இந்தியர்களை அதிகம் வெளியேற்றும் கனடா

நாடு கடத்தப்பட்டுள்ளனர்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Canada

கடுமையான குடிவரவு கட்டுப்பாடுகளால் வெளியேற்றம்

கனடாவில் கடுமையான குடிவரவு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 3,323 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருத்தல், குடிவரவு விதிகளை மீறுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2025-ம் ஆண்டு முழுவதும் நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கையில் இது 88 சதவீதமாகும். ஜனவரி 1 முதல் ஜூலை 22 வரை அமெரிக்காவில் இருந்து 1,273 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், கனடா அரசு அமெரிக்காவை விட 2.5 மடங்குக்கும் அதிகமாக இந்தியர்களை வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

48 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் 

அமெரிக்காவின் பியூர்ட்டோ ரிக்கோவில் கடும் வறட்சி காரணமாக, 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சான் ஜுவான் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தண்ணீர் லாரிகள் மற்றும் சேமிப்பு தொட்டிகளை நம்பியுள்ளனர். நீடித்து வரும் வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் முகமை அலுவலக கட்டடத்தில் தீ

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள வருவாய் முகமை அலுவலகக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 16 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் இருந்து கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், சுமார் 185 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 37 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
வேலை இழந்தால் உடனடியாக வெளியேற வேண்டும்?

வேலை இழந்தால் உடனடியாக வெளியேற வேண்டும்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேரளத்திற்கு செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved