news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews வேலை இழந்தால் உடனடியாக வெளியேற வேண்டும்?
tv

Also Watch

வேலை இழந்தால் உடனடியாக வெளியேற வேண்டும்?

அமெரிக்க பாதுகாப்புத் துறை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
H1B Visa

60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் புதிய திட்டம் 

அமெரிக்காவில் வேலை இழந்த H-1B மற்றும் இதர விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் புதிய திட்டத்தை அந்நாட்டு உள்நாட்டு பாதுகாப்புத் துறை பரிசீலித்துள்ளது. இந்த முன்மொழிவு தற்போது ஆய்வில் உள்ளதாகவும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

அப்படி இந்த விசா விதிமுறை அமலுக்கு வந்தால், வேலையை இழக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய அவகாசம் கிடைக்காமல் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

அமெரிக்க தாக்குதலில் மொஜ்தபா கமேனிக்கு படுகாயம்

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி எந்த நேரத்திலும் உயிரிழக்கக்கூடும் என அந்நாட்டு உயர்மட்டத் தலைவர்கள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலில் படுகாயமடைந்த அவர், பொதுவெளியில் தோன்றாமல் ரகசியமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு 

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பெட்ரோல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதுடன், பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. பாகிஸ்தானில் இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் 113 ரூபாய்க்கும், டீசல் 130 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Related Link
இந்தியாவுக்கு 100% வரி விதிக்கும் புதிய மசோதா

இந்தியாவுக்கு 100% வரி விதிக்கும் புதிய மசோதா

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேரளத்திற்கு செல்ல சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved