Also Watch
Read this
By: Manigandan Raja

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளைத் தண்டிக்கும் நோக்கம்
இந்தியாவிற்கு 100சதவீதம் வரி விதிக்க வழிவக்கும் மசோதாவை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது 100சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கும் புதிய மசோதாவுக்கு ஆதரவாக 86 பேர் வாக்களித்த நிலையில் பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்யும் வகையில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளைத் தண்டிக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏமன்
சமீபத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் படைகள் தாக்குதல் நடத்தியது. மரிப் மற்றும் ஹத்ரமவுத் மாகாணங்களில் உள்ள ஏமன் ராணுவ முகாம்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 30-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
50 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஏமன் அரசுப் படைகள் பல முனைகளில் ஹவுதி நிலைகள் மற்றும் ராணுவச் சாதனங்கள் மீது அதிரடித் தாக்குதல்களை நடத்தியது. ஏமன் ராணுவம் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல், பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
ஓமன் அருகே கடலில் மூழ்கும் எண்ணெய் கப்பல்
ஓமன் கடற்கரைக்கு அருகே ஹல்லானியத் தீவு அருகில் ரஷ்ய எண்ணெய் கப்பல் தரை தட்டி மூழ்கும் நிலையில் உள்ளதால், கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. கரோலின் பெசங்கி Caroline Bezengi) என்ற டேங்கர் கப்பல், ஓமனின் தோபார் கடற்கரை (Dhofar) அருகே தரை தட்டி கடலுக்கு மூழ்கி வருகிறது.

இதனால் கப்பலில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் கசிவு சுமார் 800 சதுர கிலோமீட்டர் வரை வேகமாகப் பரவி கடல்வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved