Also Watch
Read this

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக, இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

ஈரான் அதிபர் பெசேஷ்கியனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், இதுவரை எந்தவொரு அமைச்சரவை உறுப்பினர்களும் கமேனியை சந்திக்கவில்லை என்றும், அவரது உடல்நிலை மோசமாகி உள்ளது என்றும், விரைவில் அவர் வீர மரணம் அடைந்த செய்தி வந்தால்கூட தாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளன.

சவுதி அரேபியாவுக்குப் பாதுகாப்பைத் தராது
துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்குப் பாதுகாப்பைத் தராது என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெசாயி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அமெரிக்காவுக்குப் பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்ச ஆதரவு அளித்தும் பாதுகாப்பு கிடைக்காதது போல, துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான வெறும் காகித ஒப்பந்தமும் அவர்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை சவுதி உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மற்றவர்களிடம் பாதுகாப்பிற்கு கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படாத வகையில், தங்கள் கொள்கைகளைச் சீரமைத்துக் கொள்ளுங்கள் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தான், துருக்கி, சவூதி இடையே முத்தரப்பு ஒப்பந்தம்
பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா இடையே முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மெக்கா ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தப்படி, NATO அமைப்பைப் போலவே இந்த மூன்று நாடுகளின் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது அனைத்து தரப்பினரின் மீதான தாக்குதலாகக் கருதப்பட்டு இணைந்து பதிலடி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெட்டாவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் இந்த மூன்று முக்கிய நாடுகள் இடையே கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved