சவுதி அரேபியாவில் ஸ்மித் மச்சாருக்கு அறுவை சிகிச்சை
ஃபிளை துபாய் விமானத்தை ஆபத்திலிருந்து காத்த ஸ்மித் மச்சார் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்ட நிலையில், சவுதி அரேபியாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மண்டையில் எலும்பின் ஒரு பகுதி மூளையை அழுத்தும் வகையில் உள்நோக்கி சென்றதாக சொல்லப்படுகிறது. அவரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்து செல்வதற்கு முன்பாக சவுதி அரேபியாவில் தரையிறக்கி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நைஜீரியாவில் 32 பேருடன் சென்ற ராணுவ விமானம் விபத்து
நைஜீரியாவில் 32 பேருடன் சென்ற ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. பெனின் நகரிலிருந்து லாகோஸ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒண்டோ மாநிலத்தின் இக்போகோடாவில் ((Igbokoda)) உள்ள கடற்படை தளம் அருகே விழுந்து நொறுங்கியது.
விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், 25 பயணிகள், 7 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதை அதிபர் போலா டினுபு உறுதிபடுத்தி உள்ளார்.
ஃபிளைதுபாய் சம்பவத்துக்கும் ஈரானுக்கும் தொடர்பா?
ஃபிளைதுபாய் விமானச் சம்பவத்துக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்த நிலையில், ஈரானுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மாற்று கருத்தை தெரிவித்தார்.
அலாஸ்காவிற்குப் புறப்பட்டபோது, செய்தியாளர்களை சந்தித்த ஜே.டி.வான்ஸ் ஈரானை குற்றம்ச்சாட்டும் அளவுக்கு உறுதியான எந்த ஆதாரமும் இல்லையென அவர் தெரிவித்தார்.