news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews கென்யாவில் ஆடு மேய்ப்பவருக்கு ஆற்றில் கிடைத்த தங்கம்
tv

Also Watch

கென்யாவில் ஆடு மேய்ப்பவருக்கு ஆற்றில் கிடைத்த தங்கம்

தேடுதல் வேட்டை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கென்யா

பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஆற்றில் தங்க வேட்டை

கென்யா நாட்டின் செபோரோர் ((Cheporor)) கிராமத்தில் தங்கம் இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக தங்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வெஸ்ட் பொகோட் மாவட்ட கிராமத்தில் ஆடு மேய்க்கும் மானசெ லோமச்சார் என்பவர் ஆற்றில் பெண்கள் தங்கம் சலிப்பதை பார்த்து தானும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது 3 கிராம் தங்கக் துகளை கண்டறிந்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்கள் மூலம் பரவவே, நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் வரத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து, கண்டெடுக்கப்பட்டது நிஜமான தங்கமா எனவும், அங்கு எவ்வளவு தங்கம் புதைந்துள்ளது என்பதை பரிசோதிக்க அரசு மண் மாதிரிகளை சோதனைக்கு அனுப்பி உள்ளது.

கினியா தலைநகரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை

கினியா நாட்டில் கனமழை காரணமாக குப்பைக் கிடங்கு சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கானாக்ரியில்((Conakry)) விடிய விடிய கனமழை பெய்ததால் அங்குள்ள டார்-எஸ்-சலாம் ((Dar-es-Salam)) குப்பைக் கிடங்கு சரிந்து விழுந்தது.

இதில், அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் குடிசைகள் குப்பைகளுக்குள் புதைந்ததில் 30 பேர் உயிரிழந்த நிலையில், 22 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலரும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Link
போர்ச் சூழலிலும் ஈரானுக்கு அடித்தது ஜாக்பாட்

போர்ச் சூழலிலும் ஈரானுக்கு அடித்தது ஜாக்பாட்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பன்றிக்காய்ச்சல் வைரசில் புதிய மாற்றம் இல்லை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved