Also Watch
Read this
By: Web Team

வங்கதேசத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிடவோ விளம்பரப்படுத்தவோ கூடாது என ஊடகங்களுக்கு அந்நாட்டின் இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அலோசகர் முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை யாராவது பரப்பினால், உடனடி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொது தேர்தல் நடத்தப்படவுள்ளதால் பாதுகாப்பு காரணங்களினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved