ராணுவ ஆதிக்கத்தின் கீழ் சட்டத்தின் ஆட்சி குறித்து பாகிஸ்தான் பாடம் நடத்த முடியாது என இந்திய கடுமையாக சாடியுள்ளது. ஐ.நா.வில் தேசிய அளவிலான சட்டத்தின் ஆட்சி குறித்த விவாதத்தின்போது.
பாகிஸ்தான் பேச்சுக்கு பதிலுரை அளித்த இந்தியா, சொந்த நாட்டில் ராணுவத்தின் ஆதிக்கம் நிலவும் நிலையில், மற்ற நாடுகளுக்கு சட்டம் குறித்து அறிவுரை கூறுவது முரண்பாடானது என விமர்சித்துள்ளது.
கைபர் பக்துன்வா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனம் செய்து, ஆளுநர் ஆட்சியை அந்நாட்டு அரசு அமல்படுத்தியது. சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் PTI கட்சி மாநிலத்தை ஆட்சி செய்து வந்த நிலையில், கலைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசு வேண்டுமென்றே அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.