news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவின் நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றிய ஈரான்
tv

Also Watch

அமெரிக்காவின் நீர்மூழ்கி ட்ரோனை கைப்பற்றிய ஈரான்

நீர்மூழ்கி கப்பல்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈரான்

ட்ரோனை மீளாய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையில் கைப்பற்றப்பட்ட அமெரிக்காவின் அதிநவீன நீர்மூழ்கி ட்ரோனை மீளாய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவில் தயாரிக்கப்பட்ட 19 அடி நீள நீர்மூழ்கி கப்பல் போன்ற இந்த ட்ரோன், உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடக் கூடியது.

ஹவுதி தாக்குதல்களுக்கு பதிலடி குறித்து விவாதம் இல்லை

சவுதி அரேபியா மற்றும் துருக்கி உடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில், ஹவுதி தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையிலும் ராணுவ பதிலடி குறித்து இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், ஏமன் மோதல் சவுதி அரேபியாவுக்குள் பரவினால் ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

ஈரானில் போர் முடிவுக்கு வரும் - அதிபர் டிரம்ப்

அமெரிக்க இடைத்தேர்தலுக்கு பின்னர் ஈரான் போர் முடிவுக்கு வருமென அதிரடியாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய தளத்தின் மீது தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்ததோடு, இந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு பின் ஈரான் போர் முடிவுக்கு வரும் என்றார்.

Related Link
நேபாளத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகல்

நேபாளத்தில் மேலும் ஒரு அமைச்சர் பதவி விலகல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சரிவு, பிற்பகலில் உயர்வு

24
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved