news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விமர்சனம்

ஈரான்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈரான் விமர்சனம்

அதிபர் டிரம்ப் ஒரு கொலைகாரர் என ஈரான் விமர்சனம் :

அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை கொலைகாரர் என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி பகிரங்கமாக விமர்சித்துள்ளார். ஈரான் குறித்த டிரம்பின் கருத்துக்களுக்கு பதிலளித்த பாகாயி, தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான புரிதல் ஒருபோதும் நம்பிக்கையின் அடிப்படையில் அமையவில்லை என்றும், மாறாக உறுதிமொழிக்கு உறுதிமொழி என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது என்றார்.

அமெரிக்கா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் மூலம் ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றம் சாட்டிய பாகாயி, தெஹ்ரான் தனது தேசிய நலன்களைப் பாதுகாப்பதையும், இறையாண்மையை நிலைநாட்டுவதையும் உறுதியாகப் பின்பற்றும் என்றார்.

சிரியாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்க முடிவு :

சிரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடாக வகைப்படுத்தியிருந்ததை ரத்து செய்வதற்கான தனது நிர்வாகத்தின் முடிவை அதிபர் டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

சிரியாவுடனான உறவுகளைச் சீராக்குவதற்கும், அந்நாட்டின் பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்கும் அமெரிக்க மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. தடைகளை நீக்குவது சிரியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் உதவும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ தெரிவித்துள்ளார்.

கடுமையான நிலைபாட்டால் ஸ்பெயின் இணங்கியதாக கூறிய டிரம்ப் :

தனது கடுமையான நிலைப்பாட்டால்தான் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஸ்பெயின் இணங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சி மாநாட்டில் பாதுகாப்பு செலவினங்கள் மற்றும் ஈரான் மோதல் தொடர்பாக நடந்த கடுமையான விவாதத்தின்போது.

தான் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்ற சொன்னதால், கூடுதல் நிதி உதவிகளை வழங்க ஸ்பெயின் ஒப்புக் கொண்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். ஸ்பெயினுடன் எனக்கு பிரச்சனைகள் இருந்தன, இப்போதும் இருக்கின்றன எனக் கூறிய ட்ரம்ப், ஆனால் ஸ்பெயின் இன்று முழுமையாக மீண்டு வந்துவிட்டது என கூறியுள்ளார்.

Related Link
கிரீன்லாந்து நிச்சயமாக விற்பனைக்கு அல்ல

கிரீன்லாந்து நிச்சயமாக விற்பனைக்கு அல்ல

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கயாடு லோஹர் போல் மமிதா பைஜூ எடுத்த முடிவு

0
25 mins agoshare
மமிதா பைஜூ








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau