Also Watch
Read this
By: Manigandan Raja

நேட்டோ மாநாட்டில் டென்மார்க் பிரதமர் உறுதி :
கிரீன்லாந்து பகுதி விற்பனைக்கு அல்ல என அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் டென்மார்க் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார். 2-வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்ற வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்த சூழலில், துருக்கியில் நடைபெற்று வரும் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாட்டில் இதே கருத்தை வலியுறுத்தினார். இதற்கு பதிலடி கொடுத்து பேசிய டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன், நட்பு நாடுகள் உட்பட அனைவரும் கிரீன்லாந்து மக்களின் உரிமையை மதிப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பலூச் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் :

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 4 நாட்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர், போலீஸார் உட்பட 38 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவெட்டா, ஜியாரத் மற்றும் பெலா விண்டர் பகுதிகளில் இத்தாக்குதல்கள் நடந்ததாக முப்படைகளின் மக்கள் தொடர்புத்துறை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சௌத்ரி தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேசமயம், இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகளில் 54 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.