Also Watch
Read this
கரூரில் 41 உயிர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிகழ்வின் வடுக்கள் இன்று வரை தமிழக மக்கள் மனங்களில் இருந்து மாறவில்லை. சுமார் 315 நாட்களை கடந்த பின்னரும் கரூர் மக்களின் மரண ஓலத்தின் குரல் இன்னும் நம் செவிகளில் கேட்டு கொண்டு தான் இருக்கிறது. தவெக ஆட்சி அமைந்து, முதன்முறையாக முதலமைச்சர் நாளை கரூர் செல்ல உள்ள நிலையில், செப்டம்பர் 27ல் நடந்த மீளா துயரத்தின் மீள் பார்வை இதோ உங்களுக்காக...

கடந்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நாட்டையே உலுக்கிய கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியான 41 பேரின் குடும்பத்தினரை ஜூலை 10ஆம் தேதி நேரில் சந்தித்து, முதல்வர் விஜய் ஆறுதல் கூறுகிறார்.


வாழ்நாள் துயரம் - நேரில் ஆறுதல்
கரூரில் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 32 பேருக்கு கருணை அடிப்படையில் பணியாணைகளை முதல்வர் விஜய் வழங்க உள்ளார். பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் பணியாணை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.


கரூர் நிகழ்வுக்கு 5,000 பேருக்கு அனுமதி
கரூரில், நாளை ஜூலை 10ஆம் தேதி காலை 11:30 மணிக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் பங்கேற்கிறார். நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்ற உள்ள விழாவுக்கு 5,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் விஜயின் கரூர் பயணத்திற்கான முன்னேற்பாட்டு பணிகள் மும்முரம் அடைந்தது. வெண்ணெய் மலை பகுதியில் அரங்கம் அமைக்கப்பட்டு 6,700 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் நேரில் ஆய்வு
கரூரில் முதலமைச்சர் விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தில் அமைச்சர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கரும் உடனிருந்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.