news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews சேதமடைந்த கமேனியின் இல்லத்தின் வீடியோ வெளியீடு
tv

Also Watch

tv

Read this

சேதமடைந்த கமேனியின் இல்லத்தின் வீடியோ வெளியீடு

டெக்ரான், ஈரான்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கமேனி இல்லம்

அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களில் சேதமான கமேனி இல்லம் :

அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்த கமேனியின் இல்லம் மற்றும் மசூதி சிதைக்கப்பட்ட காட்சிகளை ஈரான் முதன்முறையாக வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தெஹ்ரானின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் கமேனியின் இல்லம் மற்றும் மசூதி வாளத்திற்குள் ஏற்பட்ட சேதத்தை விவரிக்கும் 35 விநாடிகள் கொண்ட வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் அவரது உடல் அடக்க நாளில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானின் ராணுவ தளங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் :

அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் 90 ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வீடியோவை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது. ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் அமெரிக்கா தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் உள்ள வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது தாக்குதல் நடத்தும் ஈரானின் திறனை பலப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேபோன்று அமெரிக்காவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.

Related Link
அதிபர் டிரம்பிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி

அதிபர் டிரம்பிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கயாடு லோஹர் போல் மமிதா பைஜூ எடுத்த முடிவு

0
24 mins agoshare
மமிதா பைஜூ








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau