news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அதிபர் டிரம்பிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி
tv

Also Watch

tv

Read this

அதிபர் டிரம்பிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி

உக்ரைன்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெலன்ஸ்கி

உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த டிரம்ப் உதவி :

உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது, ஜெலன்ஸ்கி அதிபர் டிரம்ப்பைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, உக்ரைனின் வான் பாதுகாப்பு திறன்களை பலப்படுத்தும் வகையில், அமெரிக்கா தயாரிக்கும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை உக்ரைனிலேயே சொந்தமாக உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை உக்ரைனுக்கு வழங்குவதாக டிரம்ப் அறிவித்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்புக்கும், தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவதற்கும் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் சந்திப்பில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், அமைதியை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கிய அமெரிக்கா :

ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது என அதிபர் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடங்கியது.

ஹோர்முஸ் ஜலசந்தியில் கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்க வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களால் கோபமடைந்த டிரம்ப், போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ஈரான் மீது கடுமையான தாக்குதலை அமெரிக்கா தொடங்கியது. ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு தாக்குதல் தொடங்கியதாக அமெரிக்க ராணுவம் கூறியு நிலையில், சாபஹார், புஷேரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வீடியோவை டிரம்ப் பகிர்ந்தார். இது மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

ஈரான் மீது விடிய விடிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா :

(Courtesy : reuters)

ஈரானில் இந்தியா முதலீடு செய்துள்ள சபஹார் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் ராணுவம் ஹோர்முஸில் 3 சரக்கு கப்பல்களை தாக்கியதை தொடர்ந்து, 2 நாட்களாக அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது.

அதில் சபஹார் துறைமுகத்தில் இருந்த 2 கப்பல் முனையங்கள், கப்பலின் கட்டுப்பட்டு மையம், டிப்போ உள்ளிட்ட பல முக்கியமான அமைப்புகள் மீது விமானங்கள் மூலம் தாக்குதல் நடந்தது. இத்துறைமுகத்திற்காக இந்தியா கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது.

Related Link
ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விமர்சனம்

ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 28 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau