news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆற்றில் வெள்ளப் பெருக்கு
tv

Also Watch

tv

Read this

அலக்நந்தா மற்றும் மந்தாகினி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

ருத்ரபிரயாக், உத்தரகாண்ட்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆற்றில் வெள்ளப் பெருக்கு

கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை :

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்((Rudraprayag)) மாவட்டத்தில் பெய்த அதி கனமழை காரணமாக அலக்நந்தா((Alaknanda)) மற்றும் மந்தாகினி((Mandakini)) ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆறுகளின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ருத்ரபிரயாக் நகரின் கரையோர பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மலர் அலங்காரம் :

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா ரயில் நிலையத்தில், நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்த தம்பதியினர், தாங்கள் பயணம் செய்த அறையை காதல் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பூக்களால் அலங்கரித்திருந்த வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

முன்னதாக தங்கள் இருக்கை அறையை அலங்கரிப்பதற்காகவரவழைக்கப்பட்ட அலங்கார நிபுணர், முறையான பயணச்சீட்டு அல்லது பெட்டிக்குள் நுழைவதற்கான அனுமதி ஏதுமின்றி ரயிலில் ஏறியதால் சர்ச்சையாக மாறியது.

கேரளாவின் பாறசாலையில் 7 சவரன் செயின் பறிப்பு :

கன்னியாகுமரி கருங்கல் பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் அனிஷா தம்பதியினர் தங்களது மகளின் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் சென்றபோது இந்த கொள்ளை நிகழ்ந்துள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாறசாலை அருகே நான்கு வழி பைபாஸ் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மகளுடன் தங்களது மகளின் மருத்துவ சிகிச்சைக்காக திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, இவர்களைப் பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த மர்ம கும்பல், திடீரென அனீஷாவின் கழுத்திலிருந்த தங்க மாலையைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடியது. இந்த துணிகர வழிப்பறி சம்பவம் குறித்து தம்பதிகள் அளித்த புகாரின் பேரில் பாறசாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related Link
புனே கனமழை : லீவு கேட்ட ஊழியரின் கோரிக்கையை நிராகரித்த மேலாளார்

புனே கனமழை : லீவு கேட்ட ஊழியரின் கோரிக்கையை நிராகரித்த மேலாளார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
9 hrs 1 min agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau