news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்த போது தீ விபத்து
tv

Also Watch

tv

Read this

மாணவர்களுக்கு மதிய உணவு தயார் செய்த போது தீ விபத்து

திருக்காம்புலியூர், கரூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தீ விபத்து

கரூர் மாவட்டம், மாயனூர் அருகே மேட்டு திருகாப்புலியூர் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூடத்தில் தினந்தோறும் சமையல் செய்து உணவு கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் மாணவர்களுக்கு உணவு தயார் செய்து கொண்டிருந்தபோது கேஸ் சிலிண்டர் பைப் பழுதாகி அதன் மூலம் கேஸ் வெளியேறி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் தொடர்ந்து வெளியேறியதால் தீ மல மலவென பிடித்து சமையலறை முழுவதுமாக தீ எரிந்தது. பணியில் இருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியே வந்து உயிர் தப்பினர்.

அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தீயை அணைக்க முயற்சித்தும் அணைக்க முடியாததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த கரூர் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பள்ளி வளாகத்தில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போதை காளான் பயன்படுத்தியதாக நால்வர் கைது

2
40 mins agoshare
போதை காளான்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau