Also Watch
Read this
By: Manigandan Raja

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே பாம்பேகேசில் பகுதியை சேர்ந்த ஆகாஷ், (வயது 20) இவர் கடந்த 2024-ம் ஆண்டு ஊட்டியில் உள்ள தனியார் கல்லூரியில், இரண்டாமாண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். இவருக்கு ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்த, கோவையில் படித்து வந்த 19 வயது நர்சிங் கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் அதன்பின் காதலித்து வந்தனர். இந்தநிலையில், கடந்த 2024 ஆண்டு பிப்ரவரி மாதம் வார விடுமுறையை தினத்தன்று வாலிபர் அந்த கல்லூரி மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது வீட்டில் மது அருந்திய அவர்கள் போதை காளான் எனப்படும் விஷக்காளான் சாப்பிட்டுள்ளனர்.
இதில் மாணவி மயங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மர்மச் சாவு என்று வழக்கு பதிவு செய்த ஊட்டி போலீசார் இந்த வழக்கில் ஆகாஷை கைது செய்தனர். இதன் பின்னர் ஆகாஷ் ஜாமினில் வெளியில் வந்தார். இதன் பின்னர் மீண்டும் அவர் கோவையில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

இந்தநிலையில் ஆகாஷ் இவருடைய நண்பரும் கல்லூரி மாணவருமான இமானுவேல் (19) மற்றும் நண்பர்கள் தனுஷ், (21), ஹரிஷ் (20) ஆகியோருடன் சேர்ந்து ஊட்டி அடுத்த பிங்கர் போஸ்ட் பகுதியில் வனப்பகுதிக்கு சென்று போதை காளான் சேகரித்து மீண்டும் பயன்படுத்தி உள்ளார்.
சம்பவத்தன்று போலீசார் இவர்களே பிடித்து சோதனை செய்தபோது போதை காளான் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.