Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசலிக்குட்டை பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவர் ஆட்டோ ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சுதாகருக்கு கீர்த்திகா (23) என்கிற பெண்ணுடன் திருமணமாகி
மூன்று மாதத்தில் கைக்குழந்தை உள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு பால் ஊற்ற டைரிக்கு கீர்த்திகா சென்றுள்ளார். அப்போது ராச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சதிஷ் (25) என்பவர் இராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று இரவு கீர்த்திகாவை ஆபாசமாக திட்டியுள்ளார்.இதுகுறித்து நடந்ததை கணவர் சுதாகரிடம் கீர்த்திகா கூறியுள்ளார்.
இன்று காலை ராணுவ வீரர் சதீஷ்யிடம் தட்டி கேட்டுள்ளனர். அதற்கு அந்த ராணுவ வீரர் மீண்டும் ஆபாசமாக திட்டி கணவன் மனைவியை தாக்கியுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோத்தி மருத்துவர் கீர்த்திகாவுக்கு மூக்கு தண்டு வடம் உடைந்துள்ளது என மருத்துவர் தெரிவித்தனர்.
மேலும் அவரது கணவருக்கும் காயம்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . ராணுவ வீரர் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயம் பட்ட கணவன் மனைவி கோரிக்கை விடுத்துள்ளனர்.