Also Watch
Read this
By: Manigandan Raja

கயாடு லோஹர் போல் மமிதா பைஜூ எடுத்த முடிவு
இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மமிதா பைஜூ, சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துருக்காங்க. சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த மமிதா, எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் இந்த முடிவை எடுத்துருக்காங்க. இருப்பினும், அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களை இனி அவரது நிர்வாகக் குழுவினர் பராமரிப்பார்கள் என்று தெரிவிச்சிருக்காங்க.
அண்மையில் நடிகை கயாடு லோஹரும் இதேபோன்ற முடிவை எடுத்திருந்த நிலையில், தற்போது மமிதா பைஜூவும் சமூக வலைதளங்களுக்கு தற்காலிகமாக விடை கொடுத்திருப்பது ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்று வருது.
வெளியான ‘ரன்’ திரைப்படத்தின் ரிலீஸ் ட்ரைலர்

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மீன் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘ரன்’ திரைப்படம் வருகிற ஜூலை 10-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. இதனையொட்டி படத்தின் ரீ-ரிலீஸ் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுருக்காங்க.
ஏற்கனவே ஜூலை 10-ம் தேதி லவ் ஓ லவ், இதயம் முரளி போன்ற படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் 'ரன்' படம் ரீ-ரிலீஸ் ஆவது இணையத்தில் கவனம் பெற்று வருது. அதே மாதிரி, இந்த ரீ-ரிலீஸ் மூலம் மறைந்த நடிகர் விவேக்கை மீண்டும் நாம் திரையில் காண்பதற்கு ஒரு வாய்ப்பா அமையுது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் களமிறங்குகிறாரா தனுஷ்?

சமீபத்தில் தனுஷின் புகைப்படம் இடம்பெற்ற கொடி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதுகுறித்து விளக்கமளித்த சுப்ரமணிய சிவா, "அந்தக் கொடி புதிதாக உருவாக்கப்பட்டது அல்ல, கடந்த 15 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதனிடையே, தனுஷ் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து அவரது தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா, "அதை தனுஷ் தான் சரியான நேரத்தில் அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும், இயக்குநரும் தயாரிப்பாளருமான சுப்ரமணிய சிவா, "எது எப்போது நடக்க வேண்டுமோ, அது அப்போது நடக்கும்" என்று கூறியிருப்பது, தனுஷின் அரசியல் நுழைவு குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துருக்குனே சொல்லலாம். அவர் உண்மையிலேயே அரசியலில் களமிறங்குவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வந்த வண்ணம் உள்ளது.
ஆண்ட்ரியாவின் மகனாக எஸ்டிஆர்?

இப்போதைக்கு சிம்பு ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமா காத்திருக்குற ஒரு படம்னா அது ‘அரசன்’தான்! அதுவும் வெற்றிமாறன் இயக்கத்துல ஒரு Pure-ஆன சென்னை பையனா சிம்புவ பார்க்குறதுக்கு ரொம்பவே ஆர்வமா இருக்காங்க. இந்த நிலையிலதான் ரசிகர்களோட ஆர்வத்த மேலும் தூண்டுற மாதிரியான ஒரு அப்டேட் வெளியாகியிருக்கு.
அது என்னனா சிம்பு இந்த படத்துல அண்ட்ரியாவுக்கு மகனா நடிச்சிருக்காராம்! கதையோட தொடக்கத்துல சிம்பு சின்ன பையனா இருக்குற காலகட்ட காட்சிகள்ல அண்ட்ரியா அவருக்கு அம்மாவா வருவாருன்னும், அதுக்கு அப்பறமா சிம்பு கேங்ஸ்டரா உருவாகுற வகையில கதைக்களம் அமைஞ்சிருக்கும்னு சொல்லப்படுது.
இதுமட்டும் இல்ல அண்ட்ரியாவோட கேரக்டர ரொம்பவே Interesting-ஆ வெற்றிமாறன் செதுக்கியிருக்காரு அப்படீன்னும் சொல்லப்படுது. இதபத்தி படக்குழுவினர் என்னவோ அதிகாரப்பூர்வமா அறிவிக்கல, ஆனா அரசல் புரசலா இந்த தகவல்கள் கோலிவுட் வட்டாரங்கள்ல சுத்தி வருது.
100 கோடியை தாண்டிய 'டாக்ஸிக்' பட சம்பள செலவு

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்தின் நடிகர், நடிகைகளுக்கான மொத்த சம்பளச் செலவு ரூபாய் 100 கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகிருக்கு. இந்தப் படத்தில் நடிகர் மட்டுமல்லாமல் இணை தயாரிப்பாளராக இருக்கும் யாஷ், வழக்கமான முழு சம்பளத்திற்கு பதிலாக ரூபாய் 50 கோடியை முன்பணமாக பெற்றதுடன், படத்தின் லாபத்திலும் கணிசமான பங்கைப் பெறும் வகையிலான ஒப்பந்தத்தைத் தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுது.
அதே மாதிரி, நடிகை கியாரா அத்வானிக்கு ரூபாய் 15 கோடியும், நயன்தாராவுக்கு ரூபாய் 12 கோடியும் சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகிருக்கு. இதனால், படத்தின் முக்கிய நடிகர், நடிகைகளுக்கான மொத்த சம்பளச் செலவு ரூபாய் 100 கோடியைத் தாண்டியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருது.
இதனால தான் 'ராக்கா' பட வாய்ப்பை நிராகரித்தேன்

இயக்குநர் அட்லி இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் 'ராக்கா' படத்தில், "இதயம் முரளி படத்தின் படப்பிடிப்பு தேதிகளுடன் மோதல் ஏற்பட்டதால் 'ராக்கா' படத்தில் நடிக்க முடியவில்லை அதனால் தான் அந்த படத்தை நிராகரித்தேன்.." என்று ப்ரீத்தி முகுந்தன் தெரிவித்துருக்காங்க.
மேலும், 'பிளாஸ்ட்' படத்திற்கு பிறகு 'இதயம் முரளி' படம் தனது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படியாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கு என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இதற்கிடையில், ப்ரீத்தி முகுந்தன் விலகிய அந்தக் கதாபாத்திரத்தில் தற்போது நடிகை பாத்திமா ஜார்ஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.