Also Watch
Read this
By: Manigandan Raja

ஆழியார் பாசன திட்டத்தின் வாயிலாக திருமூர்த்தி அணையில் இருந்து கோவை திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் நான்கரை லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது மேலும் கோவை திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
இந்த நிலையில் சட்டத்திற்கும் நீதிமன்ற தீர்ப்புக்கும் மாறாகவும், திட்டக்குழு தலைவர்களை கலந்த ஆலோசிக்காமல் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் பாதிக்கின்ற வகையில் பூசாரி நாயக்கன் தண்ணீர் திறந்து விட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பூசாரி நாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டால் இப்பகுதியில் உள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்
என வலியுறுத்தி பரம்பிக்குளம் ஆழியார் திட்ட பாசன விவசாயிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் மூலம் திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு ஐந்தாவது சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு வரும் தண்ணீர் குறைவாக இருக்கும் காரணத்தினால்.

முழு சுற்று தண்ணீர் வழங்க இயலாது அரை சுற்று தண்ணீர் வழங்க முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் ஒப்புதல் அளித்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது 18 ஆம் தேதி இந்த பாசனம் முடிவடையும் இந்த சூழ்நிலையில் பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்திற்கு சம்பந்தமில்லாத பூசாரி நாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் அரசு அரசாணை பிறப்பித்துள்ளது
திருமூர்த்தி அணை முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் நிரம்பி பாலாறு வழியாக பாரதப்புழாவிற்கு செல்கிறதோ அப்போது தான் பூசாரி நாயக்கன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் சூழ்நிலையில் நீர்வளத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தார்கள் என்பது வேதனை அளிப்பதாக உள்ளது தமிழ்நாடு விவசாயிகள்
நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டப்படி திட்ட குழு ஒப்புதல் இல்லாமல் நீர் விநியோகம் நடக்கக்கூடாது என்பது சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றுவிவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் அப்போது கண்காணித்து பொறியாளர் கார்த்திகேயனிடம் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.