Also Watch
Read this
By: Manigandan Raja

என்னை கொலை செய்ய ஈரான் சதி செய்கிறது :
தன்னை கொலை செய்ய ஈரான் சதி செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அமெரிக்க தலைவர்களை ஈரான் ஒழிக்க முற்படுவதாகவும், அந்த பட்டியலில் தனது பெயரும் உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால், தற்போது வரை தனக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்து வருவதாக குறிப்பிட்டவர், அதிர்ஷ்டம் எப்போதும் கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது என்றார். மேலும், ஈரான் ஆட்சியாளர்கள் கெட்ட எண்ணம் மற்றும் வக்கிரம குணம் கொண்டவர்கள் என விமர்சித்த அவர், புற்றுநோய் போன்ற அவர்களை வேரறுக்க வேண்டும் என ஆவேசமாகத் தெரிவித்தார்.
இந்தோனேசிய பயணம் முடிந்தது: ஆஸ்திரேலியா சென்ற பிரதமர் :

இந்தோனேஷியா பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா சென்றடைந்தார். மெல்போர்ன் விமான நிலையத்தில் அரசு சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மெல்போர்னில் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விவாதிக்க உள்ளார். தொடர்ந்து, இந்தியா - ஆஸ்திரேலியா தொழில்முனைவோர் சந்திப்பில் தொழிலதிபர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். இந்திய வம்சாவளியினர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா புதிதாக தாக்கினால்... ஈரான் எச்சரிக்கை :
அமெரிக்கா தாக்கினால் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கியில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும், அந்நாட்டின் மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தியதாகவும், மீண்டும் தாக்குதல் நடத்தப் போவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கியது. மேலும், அமெரிக்கா புதிதாக தாக்கினால் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.