news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவுக்கு கத்தார் மூலம் 7 நிபந்தனைகளை விதித்த ஈரான்
tv

Also Watch

அமெரிக்காவுக்கு கத்தார் மூலம் 7 நிபந்தனைகளை விதித்த ஈரான்

எச்சரித்துள்ள ஈரான்

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈரான்

அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க நிபந்தனை

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு, கத்தார் மத்தியஸ்தர்கள் வாயிலாக அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.

இந்த நிபந்தனைகள் நிராகரிக்கப்பட்டால் தீர்க்கமான போருக்கு தாங்கள் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ள ஈரான், தங்கள் நிபந்தனைகளை கத்தார் அமெரிக்காவிடம் கூறியுள்ளதாகவும், ட்ரம்பின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

சவூதி தலைநகர் மீது ஹவுதிக்கள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலி

சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

போர் பதற்றம் அதிகரித்து வருவதால் விமானங்கள் ரத்து, வான்வெளி மூடல் மற்றும் பிற பயண இடையூறுகள் ஏற்படலாம் என்பதால், அமெரிக்கர்கள் தங்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

AI துறையை மேம்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய AI படை

செயற்கை நுண்ணறிவு துறையை மேம்படுத்தவும் கண்காணிக்கவும் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுப் படை மற்றும் புதிய AI தலைவர் ஒருவரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா- சீனா இடையே செயற்கை நுண்ணறிவு துறையில் முதலிடம் பிடிப்பதற்கான போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில், தனது Truth Social பக்கத்தில் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆந்த்ரோபிக் சிஇஓ உள்ளிட்டவர்கள் கடந்த சில தினங்கள் முன் AI ஆபத்து குறித்து கவலை தெரிவித்து அதன் வேகத்தை குறைக்க வேண்டும் என்று எச்சரித்த நிலையில், அதனை நிராகரித்த டிரம்ப், செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சிக்கு தனது நிர்வாகம் ஆதரவளிக்கும் என்றும், அது வளரும்போது, அதைக் கண்காணிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Link
தினமும் 15 நிமிடம் புத்தகங்களை வாசிப்பவர்களுக்கு பணப்பரிசு

தினமும் 15 நிமிடம் புத்தகங்களை வாசிப்பவர்களுக்கு பணப்பரிசு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved