Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்கா உடனான ஒப்பந்தம் ரத்தானதால் சீரமைப்பு பணி
போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்ததால், அணுசக்தி தளங்களை மீண்டும் கட்டமைக்க ஈரான் முயற்சி செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளை ஈரான் சீரமைத்து வருவது தொடர்பான செயற்கைக் கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை, டிரோன் தாக்குதல்
உக்ரைனின் சுமி, கீவ் மற்றும் ஒடெசா நகரங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில், ஆறு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அசோவ் கடலில் பல ரஷ்ய கப்பல்களை தாக்கி சேதப்படுத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஜெஜியாங் மாநிலத்தை தாக்கிய பாவி புயல்

சீனாவின் ஜெஜியாங் மாநிலத்தில் பாவி ((Bavi)) புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து, பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வருவதால், 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பாண்டு சீனாவை தாக்கிய 9வது புயலான Bavi, சனிக்கிழமை இரவு சுமார் 11.20 மணியளவில் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாநிலத்தில் கரையைக் கடந்தது.