Also Watch
Read this
By: Manigandan Raja

2-ஆவது பாகத்தை வெளியிட்டது அமெரிக்க பாதுகாப்புத் துறை
வேற்று கிரகவாசிகள் பயன்படுத்துவதாக நம்பப்படும் UFO. எனப்படும் பறக்கும் தட்டுகள் தொடர்பான ரகசிய கோப்புகளின் 2-ஆவது பாகத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
நாசா, சிஐஏ, எஃப்.பி.ஐ. மற்றும் எரிசக்தித் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட 14 ஆவணங்கள், 19 காணொலிகள், நான்கு ஒலிப் பதிவுகள் மற்றும் மூன்று படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சோதனை வெற்றி

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் SpaceX நிறுவனத்தின் 33 Raptor என்ஜின்களும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜூலை 16 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டு, ஸ்டார்ஷிப் விண்கலத்துடன் இணையும் போது உலகின் மிக உயரமான மற்றும் சக்திவாய்ந்த விண்கல அமைப்பாக மாறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.