Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரான் தன்னை கொலை செய்தால் அந்நாட்டை அமெரிக்கா அழித்து விடும்
ஈரான் தன்னை கொலை செய்தால், அந்நாட்டை அமெரிக்கா அழித்து விடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னைக் கொல்வதாக ஈரான் விடுத்துவரும் நீண்டகால அச்சுறுத்தல்களை அது நிறைவேற்றினால்,முன்னெப்போதும் கண்டிராத அளவில் ஈரானை அழிக்குமாறு அமெரிக்க இராணுவத்திற்கு நிரந்தர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அயதுல்லா கமேனி கொலைக்கு பழிவாங்க வேண்டும்

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் கொலைக்கு பழிவாங்க வேண்டும் என அவரது மகனும், தற்போதைய உச்சத் தலைவருமான மொஜ்தபா கமேனி சூளுரைத்துள்ளார். இந்த இரண்டு போர்களில் உயிர்நீத்த அனைத்து தியாகிகளின் ரத்தத்திற்கும் காரணமான குற்றவாளிகள் மற்றும் இழிவான கொலையாளிகளை பழிவாங்குவோம் என்று தாங்கள் சபதம் செய்வதாக மொஜ்தபா கமேனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பஹாமாஸ் நாட்டில் சிறிய விமானம் விழுந்து விபத்து
பஹாமாஸ் நாட்டில் சிறிய விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இசைக்கலைஞர்கள் உட்பட விமானத்தில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர். நாசவுக்கு (Nassau) மேற்கே உள்ள நார்த் ஆண்ட்ரோஸ் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் பிளமிங்கோ ஏர் நிறுவனத்தின் விமானச் சேவைகளை அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்தது.