Also Watch
Read this
By: Manigandan Raja

'தி ஒடிசி' பிரீமியர் காட்சிக்கு முன் CHILL செய்த படக்குழு
'தி ஒடிசி' திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்குச் செல்வதற்கு முன்பாக, இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன், முன்னணி நடிகர்களான மேட் டாமன் மற்றும் டாம் ஹாலாண்ட் ஆகியோர் மும்பையில் உள்ள ஒரு உள்ளூர் கஃபே-வில் டீ மற்றும் பன் மஸ்கா சாப்பிட்டு மகிழ்ந்த வீடியோ வெளியாகியுள்ளது. தி ஒடிசி திரைப்படம் வரும் 17-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
"சூப்பர் கேர்ள்" திரைப்படம் ரூ.1,000 கோடி நஷ்டம்?

"சூப்பர் கேர்ள்" திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் 175 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. கிரேக் கில்லெஸ்பி இயக்கியுள்ள இந்த படத்தில் சூப்பர் கேர்ளாக மில்லி அல்காக் நடித்துள்ளார்.
மேலும், சூப்பர்வில்லன் லோபோவாக ஜேசன் மோமோவ் நடித்துள்ளார். இந்த படம் மற்ற படங்களை போல பெரிய வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. கதையும் தொழில்நுட்ப தரமும் போதுமான அளவு இல்லை என்பதே படத்தின் தோல்விக்கு காரணம் என்கிறார்கள்.
"அன்பே டயானா" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு

பாரி இளவழகனின் "அன்பே டயானா" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. படத்தில் ரம்யா ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ரோஜாவும் திரைக்கு திரும்பியுள்ளார். இவர்களுடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வரும் 17-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.