news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஜெயிலர்-2 மலேசியாவில் இசை வெளியீட்டு விழா என தகவல்
tv

Also Watch

tv

Read this

ஜெயிலர்-2 மலேசியாவில் இசை வெளியீட்டு விழா என தகவல்

இதயம் முரளி வெளியிட தடையில்லை

3

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜெயிலர்-2 மலேசியாவில் இசை வெளியீட்டு விழா என தகவல்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர்-2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெளிநாடுகளில் விழாவை நடத்தினால் சர்வதேச அளவில் திரைப்படத்தின் வியாபாரம் இருக்கும் என படக்குழு நம்புகிறது. ஜெயிலர்-2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீசர் 2025 பொங்கல் பண்டிகையன்று வெளியானது. வரும் 2026 அக்டோபர் 15 அன்று ஆயுத பூஜையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜெயிலர்-2 வெளியாகிறது



துல்கர் சல்மானின் புதிய படத்தின் பெயர் SRI SRI
ரவி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்துக்கு 'SRI SRI' என பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம், அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கேம்பஸ் காதல் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. முதன்முறையாக துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்து உள்ளனர்.

கட்டா குஸ்தி-2 ரூ.50 கோடி வசூலிக்கும்-விஷ்ணு விஷால்
கட்டா குஸ்தி திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக சரியான படம் அமையாததால் ரசிகர்கள் தன்னை மறந்து விட்டார்கள் என நினைத்ததாக நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஷ்ணு விஷால் கூறினார். ஆனால் தற்போது கட்டா குஸ்தி இரண்டாம் பாகத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்பு நிரூபணமாகியுள்ளதாக அவர் கூறினார். படம் வெளியாகி ஒரு வாரத்திற்குள் உலகளவில் ரூ.30 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளது. இந்த வெற்றியை முன்னிட்டு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், விஷ்ணு விஷாலுக்கு சொகுசு காரும், இயக்குநருக்கு தங்கச்சங்கிலியும் பரிசாக வழங்கி உள்ளார்.

இதயம் முரளி திரைப்படத்தை வெளியிட தடை இல்லை
அதர்வா நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. பராசக்தி திரைப்படத்தை இயக்கியதற்காக தமக்கு வழங்க வேண்டிய சம்பளத்தில் மீதமுள்ள 8 கோடியே 39 லட்சம் ரூபாயை கொடுக்கும் வரை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இதயம் முரளி படத்தை வெளியிட தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுதா கொங்கரா வழக்கு தொடர்ந்தார்.

இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான செழியன் காலமானார்
தேசிய விருது பெற்ற இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய செழியன், கல்லூரி, தென்மேற்கு பருவக் காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். செழியன் இயக்கிய 'TOLET' திரைப்படம் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது.


Related Link
நடிகை தமன்னா நடித்துள்ள  பாலிவுட் திரைப்படம்

நடிகை தமன்னா நடித்துள்ள பாலிவுட் திரைப்படம்

            



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெயிலர்-2 மலேசியாவில் இசை வெளியீட்டு விழா என தகவல்

2
58 mins agoshare
ஜெயிலர்-2 மலேசியாவில் இசை வெளியீட்டு விழா என தகவல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau