news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news டிவி ஸ்கிரீனில் முத்தம் கொடுத்தார்கள், முதலமைச்சர் முகம் நிறைய கவலை
tv

Also Watch

tv

Read this

டிவி ஸ்கிரீனில் முத்தம் கொடுத்தார்கள், முதலமைச்சர் முகம் நிறைய கவலை

திமுகவை வெளுங்கள், கேப் விடாமல் கிண்டல்

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு மேடையில் பேசிய முதலமைச்சர் விஜய், தன் அக்கா-தங்கைகளின் தங்கப்பிள்ளைகளை இழந்துள்ளேன் எனவும் டிவியில் தனது முகத்தை பார்த்து தொட்டு தொட்டு முத்தம் கொடுத்த முத்துப்பிள்ளைகளை இழந்துள்ளதாகவும் கவலை தெரிவித்தார். நாடகம் நடத்தி 41 உயிரை காவு வாங்கிய திமுகவை வரும் இடைத்தேர்தலில் வெளு வெளு என வெளுத்துவிடுங்கள் எனக் கூறியுள்ள முதலமைச்சர், செந்தில் பாலாஜி ஓடிக்கொண்டே இருப்பதாகவும், எ.வ.வேலு வெளிநாட்டுக்கு வித்தியாச செக்கப் சென்றுள்ளதாகவும் கிண்டலடித்து உள்ளார்.

கரூரில் முதல்வர் விஜய்
கரூரில் முதல்வர் விஜய் பேசியதாவது;
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவு உயரங்களுக்குச் சென்றாலும், சில காயங்களை, வலியை மறக்க முடியாது. எனக்கு அனைத்தையும்விட வலியும், காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம் தான். பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என காவல்துறை கூறியது. நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது அங்கிருந்த காவல் துறை எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?

நிரந்தர பதிலடி தர வேண்டும்
நெடுஞ்சாலையில் இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்துவிட்டது காவல்துறை தான், இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள் எனக்கூறி பிரஷர் போட்டது யார்? கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்தனர். நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே, எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜனம் தான் முக்கியம்
என் அக்கா, தங்கைகளை இழந்திருக்கிறேன். வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் எனக் கூறுவதா? நான் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதி அல்ல. வாய் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? பணமா, ஜனமா எனக் கேட்டால், எனக்கு ஜனம்தான் முக்கியம். விஜய் ஒவ்வொரு கதையாக எடுத்து வெளியே விடுவார் போல எனக் கதறுகிறார்கள்.
விஜய் ஏன் அதைப் பற்றி பேசவில்லை, இதைப் பற்றி பேசவில்லை என்கிறார்கள்.

குற்றம் உள்ள நெஞ்சுதான்...
பாட்டுக்கு பாட்டு கச்சேரி பண்ண எங்களுக்கும் தெரியும். பண்ணலாமா? என்னை பேசு பேசு என்று சொல்கிறார்கள். ஆனால், பேச ஆரம்பித்தால் வெளியே சென்றுவிடுகிறார்கள். ‘பார்ட்டி ஃபண்ட்’ என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் இருந்து ஓடிவிட்டார்கள். யார், எந்த கட்சி என்று கூட சொல்லவில்லை, அவர்கள் ஓடிவிட்டனர். ‘என் அப்பா பீரோவுக்குள் இல்லை’ என சொல்கிறார்கள். இவர்களுடன் ஒரே கூத்தாக உள்ளது. ‘குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும்’.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

Related Link
பேசும் போது நிதானம் வேண்டும் என சிவசங்கர் விமர்சனம்

பேசும் போது நிதானம் வேண்டும் என சிவசங்கர் விமர்சனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜெயிலர்-2 மலேசியாவில் இசை வெளியீட்டு விழா என தகவல்

2
1 hr 9 mins agoshare
ஜெயிலர்-2 மலேசியாவில் இசை வெளியீட்டு விழா என தகவல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau