Also Watch
Read this
By: Manigandan Raja

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் தெள்ளார் தேசூர் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் ட்ரான்ஸ்பார்மர்களை உடைத்து அதிலுள்ள காப்பர் கம்பிகளை திருடி விற்ற பத்து நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தெள்ளார் மற்றும் தேசூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்களை மடக்கி விசாரித்ததில் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தனர் பின்னர் அந்த நபர்களை தேசூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்திய போது.

தெள்ளார் பகுதியைச் சேர்ந்த 1. பிரகாஷ், வெளிமேடுபேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் 2 தென்காசி, 3. பாண்டியன், 4 .அஜித் பாபு, திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த 5. சிலம்பரசன், 6. ராஜ்கரன்,7
.கரன், 8. பிரபாகரன் ஆகியோர் என்று தெரியவந்தது பின்னர் மேலும் விசாரணையில் தெள்ளார் மற்றும் தேத்தூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர் களில் உடைத்து காப்பர் கம்பிகளை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது இரும்பு வியாபாரிகள் 9. உமர்பாரூக்,10. கலாம் பாஷா ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆதிபடுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் திருடுவதற்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.