Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரானின் இலக்குகளை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல்
குவைத் மற்றும் பக்ரைன் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் இலக்குகள் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்தது.
இதனைக் கண்டித்து ஈரான் மீது அமெரிக்க ராணுவம் புதிய தாக்குதல்களை நடத்தியது. பதிலுக்கு ஈரான் குவைத், பக்ரைன் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகளைக் குறிவைத்தது. இதற்குப் பதிலடியாக ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், கடற்படைத் திறன்கள், வெடிமருந்து சேமிப்பு நிலையங்கள் என 140 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டதாக ஈரான் அறிவிப்பு
ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணையில் அங்கீகரிக்கப்படாத பாதையைப் பயன்படுத்திய சைப்ரஸ் நாட்டுக் கொடியுடைய சரக்குக் கப்பல் மீது ஈரானின் புரட்சிகரப் படை எச்சரிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களை தொடங்கி உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் ஆகிய நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் கூறியுள்ளன. இந்நிலையில் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல்கள் செல்ல வேண்டாம் என ஈரானின் புரட்சிகரப் படை எச்சரித்துள்ளது.
கூகுள் நிறுவன முன்னாள் அதிகாரி கணவரால் சுட்டுக்கொலை

Courtesy : aspen police acdemy
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் குடும்பத் தகராறில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கூகுள் நிறுவன முன்னாள் அதிகாரி கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 57 வயதான ஷீத்தல் வெர்ஸியன் ((Sheetal Wrzesien)) கோப் கவுண்டி ((Cobb County)) பகுதியில் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். தம்பதி இடையே நடந்த தகராறில்,கணவர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அ
வரது 23 வயது மகனும் இதில் காயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார் ஷீத்தலின் கணவர் கிர்க் வெர்ஸியனை ((Kirk B. Wrzesien)) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்கா வான்வழி தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் தாக்குதல்

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பக்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ இலக்குகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து பக்ரைன் மற்றும் குவைத்தில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன. ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இடைமறித்து அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது.