news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பகல்காம் வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் வெள்ளம்
tv

Also Watch

பகல்காம் வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் வெள்ளம்

பகல்காம், ஜம்மு காஷ்மீர்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜம்மு காஷ்மீர்

திடீர் வெள்ளத்தில் மூழ்கிய ஓட்டல்கள், வீடுகள் 

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பெய்த பலத்த மழையால் ஓடையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு ஓட்டல்கள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அனந்த்நாக் மாவட்டம், பகல்காமின் அவூரா ((Awoora ))மற்றும் தேவத்து (( Dehwathu))வனப்பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் அங்குள்ள ஓடையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது.

இதில் 5 க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை வெள்ள நீர் சூழ்ந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

குப்பை கிடங்கு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு 

புனே குப்பை கிடங்கு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 8 ஆம் தேதி புனேவின் மோஷி குப்பை கிடங்கில் உள்ள நிர்வாகக் கட்டிடத்தின் மீது, மிகப்பெரிய குப்பைக் குவியல் சரிந்து விழுந்ததில் 23 பேர் சிக்கிக் கொண்டனர்.

இருபத்திரண்டு பேர் கட்டிடத்திற்குள்ளும், ஒருவர் கட்டிடத்திற்கு அருகிலிருந்த குப்பைக் குவியலுக்கு அடியிலும் மாட்டிக்கொண்டார். தகவலறிந்து வந்த மீட்பு குழுவினர் 14 பேரை உயிருடனும் ஒருவரை சடலமாகவும் மீட்டனர். பெரும் சவால்களுக்கு மத்தியில் மற்றவர்களை தேடும் பணி நடைபெற்றது. இதில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். குப்பைக் குவியலுக்குள் மாயமானவரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

கிர்னார் மலையில் 11 வயது சிறுவனை கொன்ற சிங்கம்

குஜராத்தின் புகழ்பெற்ற கிர்னார் மலையில் ஏறி சாமி தரிசனம் செய்ய சென்ற 11 வயது சிறுவனை சிங்கம் ஒன்று காட்டுக்குள் இழுத்துச் சென்று அடித்து கொன்றது. கேடா மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் மயூர் சவுகான், தனது குடும்பத்தினருடன் அதிகாலை மலையேறிக் கொண்டிருந்தபோது இருட்டில் பதுங்கியிருந்த சிங்கம் சிறுவனைப் பிடித்து காட்டுக்குள் இழுத்துச் சென்றது.

உடடினயாக தேடுதல் வேட்டையில் இறங்கிய வனத்துறையினர் சிறிது நேரத்தில் சிறுவனின் உடலை மீட்டனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து 3 சிங்கங்களை பிடித்த வனத்துறை சக்கார்பாக் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி உள்ளது.

Related Link
மட்டனுக்கு பதிலாக சிக்கன் போட்டது குற்றமா?

மட்டனுக்கு பதிலாக சிக்கன் போட்டது குற்றமா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved