Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரிய கசிநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீதாராம சுவாமி ஆலய மகா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் பம்பை இசை, கணபதி பூஜை, சுவாமி கரிக்கோலம் வலம் வருதல், தாய் வீட்டு தட்டு வரிசை எடுத்து வருதல், இரண்டாம் கால பூஜைகள் தொடக்கம், கணபதி ஹோமம் , பிரதான ஹோமங்கள், மகாலட்சுமி நவகிரக ஹோமங்கள், விஸ்வரூப தரிசனம், மங்கள ஆர்த்தி, மூலமந்திர ஹோமம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் கோபுர காலசத்தின் மீது தீப ஆராதனை செய்யப்பட்டு மலர் தூவி புனித நீர் ஊற்றி பின்பு பக்தர்கள் மீது தெளித்தனர். பின்னர் பக்தர்கள் அனைவரும் கோவிந்தா, கோவிந்தா, என்ற என்ற முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதில் சுற்றுவட்டார பக்தர்கள் 5000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.