Also Watch
Read this
By: Manigandan Raja

நேற்று மாலை 3:50 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சரியான நேரத்துக்கு இயக்கப்படவில்லை. அதே நேரத்தில் அதில் பயணிக்க இருந்த பயணிகளுக்கும் உரிய காரணங்களை தெரியப்படுத்தாத காரணத்தால் பயணிகள் விமானம் ரத்து செய்யப்படுமா அல்லது புறப்படுமா என்று கவலையோடு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

மேலும் பயணிகள் அங்கும் இங்குமாக விமான நிலையத்திற்குள் அலைகழிக்கப்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். 3:50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 6 25 மணிக்கு தான் புறப்பட்டு இருக்கிறது.
சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டதால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.