Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரை அடுத்துள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் முருகம்மாள், இவரது வீட்டின் அருகிலேயே உள்ள இராஜலிங்கம் என்பவரும் நாட்டுக் கோழிகளை வளர்ப்பதாக கூறப்படுகிறது.
கோழி வளர்ப்பதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இன்று முருகம்மாள் குடும்பத்தினரை ராஜலிங்கம் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியதில் முருகம்மாள், அவரது மகன் சக்தி மற்றும் பொன்னழகு என்ற மூவர் காயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் முருகம்மாள் அளித்த புகாரின் பேரில் செக்காணூரணி போலீசார் ராஜலிங்கம் அவரது மனைவி தாரணி, மகன் ரகு மற்றும் விருமாண்டி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து ராஜலிங்கம், ரகு, விருமாண்டி என்ற மூவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோழி வளர்ப்பதில் ஏற்பட்ட தகராறில், தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.