Also Watch
Read this

அமெரிக்க அதிபர் டிரம்பை கொலை செய்ய புதிய சதித் திட்டத்தை ஈரான் தீட்டி உள்ளதாக உளவுத்துறை அறிக்கையை அமெரிக்காவிடம் இஸ்ரேல் வழங்கி உள்ளது.
உளவுத்துறை அறிக்கையை வழங்கிய இஸ்ரேல்
ஈரான் உடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தாம் தான் ஈரானின் முதல் இலக்கு என சமீபத்தில் டிரம்ப் கூறி இருந்தார். அந்த தகவலை தற்போது இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது. இது குறித்து பேசிய டிரம்ப், அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரோடு இருக்கிறேன், ஆனால், இது எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரியவில்லை என்றார்.

இறுதி ஊர்வலத்தில் பேனர்கள்
அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை கொல்வோம்’ என்ற பேனரை ஏந்தி இருந்தனர். இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருப்பதாவது;
அமெரிக்காவில் அதிபர் பொறுப்பில் உள்ளவரை படுகொலை செய்யவோ மற்றும் அதற்கான முயற்சியில் ஈடுபடவோ ஈரான் முயன்றால், அதனை எதிர்கொள்ளும் வகையில் அந்த தேசத்தை நோக்கிப் பாய ஆயிரம் ஏவுகணைகள் தயாராக உள்ளன.

அமெரிக்க ராணுவம் தயார்
ஈரானின் அனைத்து பகுதிகளையும் தாக்குவதற்கான உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க ராணுவமும் அதற்கு தயாராக உள்ளது. இந்த உத்தரவு ஓராண்டு காலம் அமலில் இருக்கும். அது நீட்டிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. பேச்சுவார்த்தையை தொடர ஈரான் எங்களிடம் கோரியது. அதை நாங்களும் ஏற்றுக் கொண்டு உள்ளோம். ஆனால், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக அவர்களிடம் தெளிவாக அமெரிக்கா கூறி உள்ளது.
இவ்வாறு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved