news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திமுக, அதிமுக கூட்டு சேரலாம் என டி.டி.வி.தினகரன் கருத்து
tv

Also Watch

tv

Read this

திமுக, அதிமுக கூட்டு சேரலாம் என டி.டி.வி.தினகரன் கருத்து

தவெக செய்தது நியாயம் என்றால்...

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பேரறிஞர் அண்ணா, ராஜாஜி போன்று, அரசியல் சூழல் கருதி திமுக, அதிமுக கூட்டணி வைப்பதில் தவறில்லை என, டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார். திமுக கூட்டணியில் வென்றவர்களை அழைத்து, தவெக அரசில் அமைச்சர் பதவி கொடுத்தது நியாயம் என்றால், இதுவும் நியாயம் தான் எனவும் டிடிவி.தினகரன் தெரிவித்து உள்ளார்.

எந்த கூட்டணியும் சரி தான்...
இதுகுறித்து, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியதாவது;
திமுக - அதிமுக கூட்டணி அமைக்கலாம். இது ஒரு political situation அடிப்படையிலானது. தவெகவை எதிர்த்து வென்ற கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைப்பதற்கு கூட்டணி அமைப்பது சரி என்றால், எந்த கூட்டணியும் சரி தான். திமுக, அதிமுகவை கூட்டு களவாணிகள் என விஜய் விமர்சிக்கிறார், உண்மையில் விஜய் தான் களவாணி. ஆடு திருடன், மாடு திருடன் மாதிரி எம்.எல்.ஏ. திருடர் நீங்கள். எம்.எல்.ஏ. களவாணி நீங்கள்.

அதிமுகவில் இணைப்பா?
வாழ்வு வந்து விட்டது என்பதற்காக அர்த்த ராத்திரியில் குடை பிடிக்க வேண்டாம். விஜய் பேச்சில் அகங்காரம், ஆணவம் மட்டும் தான் தெரிகிறது. அதிமுகவில் இணைவது குறித்து, என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அமமுக தனிக்கட்சி. அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இருக்கிறோம். அவர்களோடு தான் தான் இருக்கிறோம், அதிமுகவோடு தான் பயணிக்கிறோம்.

உரிய தண்டனை கிடைக்கும்
இப்போது விஜய் தானே காவல்துறைக்கு அமைச்சர். அன்று போலீசார் தவறு செய்ததாக சொல்பவர், ஆட்சிக்கு வந்த பின்னர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? முதலமைச்சர் சொல்வது உண்மையா? என்பதை சிபிஐ விசாரிக்கிறது. உண்மை வெளிப்படும். இப்போது பழியை யார் மீதோ போடுவது சரியாக இருக்காது. யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்.

கடைத் தேங்காயை எடுத்து...
உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கிறார்கள். விஜய் இன்னும் சினிமா நடிகராகவே இருக்கிறார். கரூரில் அவருடைய பேச்சில், உடல் மொழியில் எந்த துக்கமும் தெரியவில்லை. அவர் சினிமா கிளைமாக்சில் பேசுவது போல பேசி கொண்டிருக்கிறார். விஜய் பேச்சில் அகங்காரம், ஆணவம் மட்டும் தான் தெரிகிறது.

மக்கள் பிரச்சினைகளில்...
விஜய்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட ஆதரவு தரும் கட்சிகள் மேல் நம்பிக்கை இல்லை.
அதனால், தான் அதிமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்து தன் கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அதிமுக உறுப்பினர்களுக்கு ஏதோ ஒரு Consideration
செய்து உள்ளார்கள். அதை தான் குதிரை பேரம் என்கிறோம். இன்னொரு கட்சியில் வென்றவர்களை தங்கள் கட்சியில் சேர்த்து வைத்திருப்பதும் ஊழல் தான். அதிமுக உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்ததும் ஊழலில் தான் சேரும். தவெக தூய சக்தி அல்ல, தமிழ்நாட்டை அழிக்க வந்த நாசகார சக்தி.

தமிழ்நாட்டை காக்க வந்த தேவ தூதர், அவதார புருஷர் போல பேசுகிறார் விஜய். ஆனால், விவசாய கடன் ரத்து விவகாரத்தில் ஏமாற்று வேலையை செய்தார்கள். எதிர்க்கட்சிகளை சுரண்டாமல் மக்கள் பிரச்சனைகளில் விஜய் கவனம் செலுத்த வேண்டும். 'Reel less work more' என செயல்பட வேண்டும். விஜயகாந்த் உடன் விஜயை ஒப்பிடாதீர்கள். விஜயகாந்த் வெளியில் நடிக்க மாட்டார், சினிமாவில் மட்டும் தான் நடிப்பார்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறி உள்ளார்.

Related Link
திமுக, தவெக ஓரணியில் இணைவதில் என்ன தவறு? திருமாவளவன் கேள்வி

திமுக, தவெக ஓரணியில் இணைவதில் என்ன தவறு? திருமாவளவன் கேள்வி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மஷாத் புனிதத் தலத்தின் வரலாறும் பிரம்மாண்டமும்

14
23 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau