news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மஷாத் புனிதத் தலத்தின் வரலாறும் பிரம்மாண்டமும்
tv

Also Watch

tv

Read this

மஷாத் புனிதத் தலத்தின் வரலாறும் பிரம்மாண்டமும்

ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதிப்பயணம்

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரானின் அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியான உச்ச அதிகாரமாகப் பல தசாப்தங்களாக திகழ்ந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, பிப்ரவரி 2026ல் நடைபெற்ற அமெரிக்க, இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது மறைவைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் ஈராக்கின் முக்கியப் புனித நகரங்கள் வழியாக ஆறு நாட்கள் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பிரம்மாண்ட இறுதி ஊர்வலத்திற்குப் பிறகு, ஜூலை 9, 2026 அன்று அவரது உடல் சொந்த ஊரான மஷாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசா தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முக்கிய அரசியல் திருப்புமுனை
ஈரானின் வரலாற்றில் மிக முக்கியமான அரசியல் திருப்புமுனையாகப் பார்க்கப்படும் கமேனியின் இந்த இறுதிப் பயணம், அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் ஆன்மீகச் சிறப்பு, கட்டிடக்கலை பிரம்மாண்டம் மற்றும் அதில் திரண்ட கோடிக்கணக்கான மக்களின் அஞ்சலி பேசு பொருளாகி உள்ளது.

ஆறு நாட்களாக, ஈரான் மற்றும் ஈராக்கின் முக்கிய நகரங்களான தெஹ்ரான், கோம், நஜாஃப் மற்றும் கர்பலா வழியாக ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு இறுதியில் மஷாத் வந்தடைந்தது.

100க்கும் மேற்பட்ட நாடுகளின்...
இறுதி ஊர்வலத்தில், ஒட்டுமொத்தமாக 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக மஷாத் மாகாண ஆளுநர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இந்தியாவின் அதிகாரப்பூர்வ குழு உட்பட உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் தூதர்கள் இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்றனர். அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் கமேனியுடன் சேர்ந்து உயிரிழந்த அவரது மகள், மருமகன், பேத்தி மற்றும் அவரது மகன் மொஜ்தாபா கமேனியின் மனைவி ஆகியோரின் உடல்களும் அவருடன் சேர்த்தே நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆன்மீக மையம்
இந்த மஷாத் நகரத்தில் உள்ள இமாம் ரெசா வளாகம் பல நூற்றாண்டுகளாக ஈரானின் மிக முக்கியமான ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்களின் இறுதி ஓய்விடமாகத் திகழ்கிறது. இங்கு நல்லடக்கம் செய்யப்பட்ட முக்கிய நபர்கள் பார்த்தா இமாம் அலி அல்-ரெசா ஷியா முஸ்லிம்களின் 8ஆவது இமாம் கி.பி. 818ல் இங்கு அடக்கம் செய்யப்பட்டார்.

இந்த இடத்தின் முதன்மைப் புனிதத்துவத்திற்கு இவரே காரணம். அடுத்து ஹாரூன் அல்-ரஷீத் புகழ்பெற்ற அப்பாசித் பேரரசர் Abbasid Caliph, இமாம் ரெசாவுக்கு முன்பே கி.பி. 809 இதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இப்ராஹிம் ரைசி 2024 ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த ஈரானின் முன்னாள் அதிபர். ஈரானை ஆண்ட பல மன்னர்களும் வரலாற்றுப் பிரமுகர்களும் இந்த வளாகத்தின் வெவ்வேறு பகுதிகளில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இமாம் ரெசா தர்கா, ஈரானில் அமைந்துள்ள ஒரே ஷியா இமாமின் தர்ஹா. இது ஈரானியர்களின் மிக உயர்ந்த ஆன்மீக மையமாகக் கருதப்படுகிறது.

ஆண்டுக்கு 3 கோடி பேர்
இது மட்டுமில்ல, மஷாத் நகரம் அலி கமேனியின் பிறப்பிடமும் கூட. தனது சொந்த ஊரிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது கமேனியின் இறுதி விருப்பமாக இருந்தது. ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து 2 முதல் 3 கோடிக்கும் அதிகமான ஷியா முஸ்லிம் யாத்ரீகர்கள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். பரப்பளவின் அடிப்படையில் இமாம் ரெசா தர்கா உலகின் மிகப்பெரிய மசூதி வளாகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

கமேனி உடல் நல்லடக்கம்
இந்த வளாகத்தின் மிக முக்கிய அம்சம் இதன் பிரம்மாண்டமான தங்கக் குவிமாடம் மற்றும் அழகிய நீல நிற மினாரட். தர்காவின் உட்புறம் கண்ணாடிகளால் ஆன அதிநவீன வேலைப்பாடு , பலவகை மின்கலங்கள், மற்றும் பாரசீகக் கட்டிடக் கலையின் உச்சமான டைல்ஸ் வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

இதன் உள்ளே ஏழு பெரிய முற்றங்களும் பல தொழுகைக் கூடங்களும் உள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்தில் கமேனி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Related Link
வரலாற்றிலேயே மிகப்பெரிய இறுதிச் சடங்கு, பாரசீக தேசம் அமெரிக்காவிற்கு சொன்ன செய்தி

வரலாற்றிலேயே மிகப்பெரிய இறுதிச் சடங்கு, பாரசீக தேசம் அமெரிக்காவிற்கு சொன்ன செய்தி

                   

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

175ஆவது படத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வா?

7
20 mins agoshare
175ஆவது படத்துடன் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வா?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau