Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுரங்கம்
லெபனானில் ஈரானுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுரங்கத் தளத்தை அழித்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ஈரானுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய ஈரானிய ராணுவத் தளங்களில் ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
கடலில் உருவான மிகப்பெரிய நீர்ச்சுழல்
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம், பென்சகோலா கடற்கரை அருகே கடலில் மிகப்பெரிய நீர்ச்சுழல் உருவான அரிய காட்சியை பலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். கடல் பரப்பில் உருவாகும் இந்த வானிலை நிகழ்வு, நிலத்தில் ஏற்படும் சூறாவளியைப் போன்றே சுழலும் காற்றுத் தூணாக காணப்பட்டது.

உலகின் மிகக் குறுகலான பகுதிகளில் ஓட்டக்கூடிய கார்
இத்தாலியைச் சேர்ந்த ஆண்ட்ரியா மராஸி, உலகின் மிகக் குறுகலான பகுதிகளில் ஓட்டக்கூடிய காரை உருவாக்கியுள்ளார். வெறும் 50.20 சென்டிமீட்டர் அகலம் கொண்ட இந்த சிறிய காரை குறுகிய இடங்களிலும் எளிதாக ஓட்டவும், பார்க்கிங் செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved