Also Watch
Read this
By: Manigandan Raja

இந்திய அரசை அவமதிக்கும் விதமாக லலித் மோடியும், விஜய் மல்லையாவும் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், நாட்டில் சட்டப்படி தேடப்படும் குற்றவாளிகள், தப்பியோடியவர்களை மீண்டும் திருப்பி கொண்டு வருவதற்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளோம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.லலிதா மோடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஜய் மல்லையாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தாங்கள் இருவரும் தப்பியோடியவர்கள். இதைப் பார்த்து பொறாமையிலேயே வயிறு எரியுங்கள் ' என இருவரும் குறிப்பிடும் காட்சிகள் இடம்பெற்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved