Also Watch
Read this
By: Manigandan Raja

12 மணி நேரத்திற்கும் மேலாக தொட்டிக்குள் போராடிய கரடி குடும்பம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தண்ணீர் தொட்டிக்குள் சிக்கிய தாய் கரடி மற்றும் 3 குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டன. லா வெர்ன் பகுதியில் உள்ள மார்ஷல் கேன்யன் பூங்காவில், தண்ணீர் தேடி தொட்டிக்குள் சென்ற கரடிகள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்த நிலையில் பத்திரமாக மீட்டனர்.
அடக்கம் செய்யப்படும் அடையாளம் தெரியாத உடல்கள்
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் அடையாளம் காணப்படாத உடல்களை, அந்நாட்டு அதிகாரிகள் அடக்கம் செய்து வருகின்றனர். இந்த பெருவெள்ளத்தால் நேபாளம் மற்றும் திபெத் முழுவதும் 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 5,000 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

பரபரப்பான சாலையில் வேகமாக சென்ற இருசக்கர வாகனம்
மேற்கு கொலம்பியாவிலுள்ள பரபரப்பான சாலை ஒன்றில், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற ஒருவர், பேருந்தின் பக்கவாட்டில் மோதியதில், அதன் திறந்திருந்த கதவு வழியாக உள்ளே தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved