Also Watch
Read this
By: Manigandan Raja

பொது பேருந்தில் இருக்கையில் கால் வைத்தால் அபராதம்
சிங்கப்பூரில் பொது போக்குவரத்தில் இருக்கையின் மீது கால்களை வைத்தால் 37 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதுமட்டுமின்றி பேருந்துகளில் ஹெட்போன் இல்லாமல் சத்தமாக பாட்டு கேட்பது , வீடியோ பார்ப்பது, குப்பை போடுவது, உணவு உண்பது மற்றும் பானங்கள் அருந்துவது போன்ற செயல்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து அல்லது முனையப் பகுதிகளில் வேண்டுமென்றே அசுத்தம் செய்தால் உதாரணமாக வாந்தி எடுத்தல், எச்சில் துப்புதல் போன்ற செயல்களுக்கு 3.15 லட்சம் ரூபாய் அபாரதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்
ஆப்கானிஸ்தானில் உள்ள 10 இராணுவ இலக்குகள் மீது பாகிஸ்தான் துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வான் எல்லைக்குள் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றதை அடுத்து, பாகிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது. கந்தஹார், காபூல் மற்றும் பக்தியா (Paktia) உள்ளிட்ட ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விபத்தில் சிக்கிய அதிவேக போர் பயிற்சி விமானம்
இங்கிலாந்தில் ராயல் விமான படைக்கு சொந்தமான அதிவேக போர் விமானம் பயிற்சியில் விபத்தில் சிக்கியபோது விமானிகள் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. ஆங்கிள்சி ((c)) தீவில் உள்ள இராணுவ விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட பயிற்சி விமானத்தில் தீப்பற்றியதை உணர்ந்த விமானிகள் இருவரும் சாதுரியமாக பாரசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.

ரோஸ்நைகர் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்கு அருகே கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தில் தீ பற்றி பல அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழும்பின.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved