Also Watch
Read this
By: Manigandan Raja

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா கடும் பதிலடி
பாகிஸ்தான் ஐநா மேடைகளில் நாடகமாடுவதை விடுத்து, தனது நாட்டு மக்களின் நலன் மற்றும் உள்நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என ஐநா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிலவரம் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் முன்வைத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தது.
ஆளும்கட்சி கூட்டணி MLA-க்கள் 8 பேர் பா.ஜ.க.வில் ஐக்கியம்
மேகாலயாவில் ஆளும்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 8 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க.வில் இணைந்தனர். இதன் மூலம், சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் 10 ஆக உயர்ந்துள்ளது.

மேகாலயா ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், ஐக்கிய ஜனநாயக கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவரும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு முன்னிலையில் ஐக்கியமாகினர்.
பேட்டிங் செய்யும் அணியே நடுவரை தேர்வு செய்தால்
பேட்டிங் செய்யும் அணியே நடுவரை தேர்வு செய்தால், அவர் அந்த அணிக்கு சாதகமாக செயல்படுவார் என்கிற சந்தேகமே எழும் என தேர்தல் ஆணையர்கள் தேர்வு விவகாரத்தில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது இவ்வாறு தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved