நுரையீரல் புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு முதல் நிகழ்வு
போப் லியோ, நுரையீரல் புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு தனது முதல் பொது நிகழ்வில் பங்கேற்றுள்ளார். வத்திக்கானில் உள்ள அப்போஸ்தலிக் அரண்மனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றினார்.
2035-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்குச் செல்ல பாக் இலக்கு
2035-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்குச் செல்லும் இலக்கை பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது. அந்நாட்டின் விண்வெளித் திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில், முதல் பாகிஸ்தான் விண்வெளி வீரர் நவம்பர் 25-ஆம் தேதி சீனாவிலிருந்து விண்வெளிப் பயணத்தைத் தொடங்க உள்ளதாகத் அந்நாட்டு அமைச்சர் அஹ்சன் இக்பால் தெரிவித்துள்ளார்.
71 வயது மீனவரை கடித்துக்கொன்ற முதலை
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில், 71 வயது மீனவர் ஸ்டீவன் ஹாமில்டன் என்பவரை சுமார் 12 அடி நீளமுள்ள முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். வின்டர் கார்டன் பகுதியில் உள்ள குளத்தில் அவர் வழக்கமாக மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட முதலையை அதிகாரிகள் பிடித்துச்சென்றனர்.