news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home worldnews உயிர்த்தியாகம் செய்யத் துணிந்த ஜோடிகளுக்கு முன்னுரிமை
tv

Also Watch

tv

Read this

உயிர்த்தியாகம் செய்யத் துணிந்த ஜோடிகளுக்கு முன்னுரிமை

ஈரான்

5

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
100 ஜோடிகளுக்கு திருமணம்

ஈரானில் ஒரே மேடையில் 100 ஜோடிகளுக்கு திருமணம் :

போர் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானில் 100-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு பிரம்மாண்டமான முறையில் அரசு சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க - இஸ்ரேல் படைகளுக்கு எதிராக தங்களின் உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக கூறி, அரசின் சுய தியாக திட்டத்தில் பதிவு செய்துகொண்ட ஜோடிகளுக்கு மட்டுமே திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

ஹோங்டூ ஜேஎல்-8 ரக பயிற்சி விமானம் தீப்பிடித்து விபத்து :

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மியான்வாலி பகுதியில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ஹோங்டூ ஜேஎல்-8 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்த விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்த இரண்டு விமானிகளும் சாதுரியமாக பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.

"கச்சா எண்ணெய் விலை விரைவில் சரியும்"  :

கச்சா எண்ணெய் விலை விரைவில் சரியும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டன்னில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மேற்கு ஆசியாவில் ஏராளமான எண்ணெய் உள்ளதாகவும், அவை கடுமையாக வீழ்ச்சியடையும் எனவும், எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைவதை நீங்கள் காண்பீர்கள் எனவும் தெரிவித்தார்.

பெரு நாட்டின் தெற்கு பசிபிக் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் :

பெரு நாட்டின் தெற்கு பசிபிக் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல கட்டடங்கள் இடிந்து சேதமடைந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஐகா மாகாண பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

சீனாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் 22 பேர் உயிரிழப்பு :

சீனாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளனர். தென்மேற்கே குவாங்சி பகுதியில் பண்ணை தொழிலாளர்களுடன் சென்ற லாரி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் மட்டும் 10 பேர் பலியாகினர். பல்வேறு மாகாணங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

Related Link
ஒருபுறம் மத்தியஸ்தம்; மறுபுறம் சவுதியுடன் ராணுவ ஒத்துழைப்பு

ஒருபுறம் மத்தியஸ்தம்; மறுபுறம் சவுதியுடன் ராணுவ ஒத்துழைப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு..!!

2
3 hrs 31 mins agoshare
Neet exambutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved