Also Watch
Read this
By: Manigandan Raja

அரசியல் வேறுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு சந்திப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி ஆகியோர் அரசியல் வேறுபாடுகளைத் தள்ளிவைத்துவிட்டு, குடியேற்றச் சட்ட அமலாக்கம் மற்றும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான வீட்டுவசதித் திட்டம் குறித்து சந்தித்து பேசினர்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டிரம்ப் வந்தபோது இந்த சந்திப்பு நடைபெற்றது. கடந்த தேர்தலின் போது மம்தானியை "கம்யூனிஸ்ட்" என்றும் " பைத்தியக்காரர்" என்றும் கடுமையாக விமர்சித்திருந்த டிரம்ப், சந்திப்பின்போது மம்தானியின் முதுகில் தட்டிக்கொடுத்து, சிறந்த மேயராக வருவீர்கள் என்று பாராட்டி ஆச்சரியப்படுத்தினார்.
CNN உள்ளிட்ட ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை தடை
CNN உள்ளிட்ட ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை தடை விதித்ததைத் தொடர்ந்து, டிரம்ப் குறித்த செய்திகளை வெளியிடுவதை முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன. தனது நிர்வாகம் பற்றி CNN, MS NOW மற்றும் Politico ஆகிய ஊடகங்கள போலிச் செய்திகளை வெளியிடுவதாகக் குற்றம் சாட்டிய டிரம்ப் அவர்கள் வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் நுழையத் தடை விதித்தார்.

இது பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்துள்ள முக்கிய ஊடகங்களான Fox News Media, ABC News, CBS News போன்றவை, வெள்ளை மாளிகையில் நடந்த அதிபரின் நிகழ்ச்சியை கவரேஜ் செய்யாமல் புறக்கணித்தன.
ஏமனின் மொகா நகரை குறிவைத்து வான்வழித் தாக்குதல்
ஏமனின் Mokha நகரை குறிவைத்து சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதலில் இரு குழந்தைகள், ஒரு பெண் உட்பட 6 பேர் கொல்லப்பட்ட நிலையில் 8 பேர் காயமடைந்தனர்.

ஏமனின் முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் துறைமுக நகரமான Mokha-வை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இம்மாதத்தில் கைப்பற்றிய நிலையில், சவுதி அரேபியா இத்தாக்குதலை நடத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved