news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews CNN செய்தியாளரை கடுமையாக விமர்சித்த அதிபர் டிரம்ப்
tv

Also Watch

CNN செய்தியாளரை கடுமையாக விமர்சித்த அதிபர் டிரம்ப்

கிறிஸ்டன் ஹோம்ஸை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அதிபர் டிரம்ப்

நடாலி ஹார்ப் & வட கொரியா தொடர்பான கேள்விகளால் கோபம்

நடாலி ஹார்ப் மற்றும் வட கொரியா தொடர்பான கேள்விகளுக்காக CNN செய்தியாளர் கிறிஸ்டன் ஹோம்ஸை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாகச் சாடினார்.

வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் செய்தியாளர் கிறிஸ்டன் ஹோம்ஸ், ட்ரம்ப்பின் உதவியாளர் நடாலி ஹார்பு குறித்தும், தென் கொரியா உடனான கூட்டு ராணுவப் பயிற்சிகளைக் குறைப்பது குறித்து வட கொரிய தலைவர் கிம் கோரிக்கை விடுத்தாரா என்றும் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த டிரம்ப், செய்தியாளரை கடுமையாக திட்டினார்.

கிம் ஜாங் உன்னுடனான உறவு குறித்து பேசிய அதிபர் டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான உறவு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார். வடகொரியாவுடனான தூதரக முயற்சிகள் மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்து வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், தாம் விடுத்த தூதரக முன்னெடுப்புகளுக்கு வடகொரியா தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக சூசகமாக கூறினார்.

மேலும் கிம் ஜாங் உன் எப்போதும் தன்னை மிகுந்த மரியாதையுடன் நடத்தியுள்ளதாகவும் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டுள்ளதாகவும் கூறினார். கிம் ஜாங் உன்னை பாராட்டிய அதே வேளையில், ஈரானுக்கு எதிரான போரில் உதவத் தவறியதற்காக தனது நட்பு நாடான தென்கொரியவை அவர் கண்டித்தார்.

இந்தியாவின் தேர்தல் முறையை சுட்டிக்காட்டி பேசிய டிரம்ப் 

அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும், 'சேவ் அமெரிக்கா' சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் இந்தியாவின் தேர்தல் முறையை அதிபர் டிரம்ப் ஒரு முன்மாதிரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரது பதிவில், இந்தியாவில் ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணம் வைத்திருப்பது கட்டாயமாக்கப் பட்டிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். மேலும், இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே அஞ்சல் மூலம் வாக்களித்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்காவிலும் அஞ்சல் வழியிலான வாக்குகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

SAVE America Act' மசோதாவிற்கு ஆதரவைத் திரட்டும் நோக்கிலேயே டிரம்ப் கருத்துகள் கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

Related Link
ரஷ்யா மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் ட்ரோன் பயன்பாடு

ரஷ்யா மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் ட்ரோன் பயன்பாடு

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய Konark எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved