news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரஷ்யா மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் ட்ரோன் பயன்பாடு
tv

Also Watch

ரஷ்யா மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் ட்ரோன் பயன்பாடு

கடும் கண்டனம்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரிட்டன் ட்ரோன் பயன்பாடு

பிரிட்டன் ட்ரோனைக் கொண்டு தாக்கிய உக்ரைன்

தங்கள் நாட்டின் மீதான வான்வழித் தாக்குதலுக்கு பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை உக்ரைன் பயன்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, பிரிட்டனுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக எச்சரித்துள்ளது.

லண்டனில் உள்ள ரஷ்யத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் மீதான தாக்குதல்களுக்கு பிரிட்டன் உடந்தையாகச் செயல்படுவதோடு, இரு நாடுகளுக்கு இடையேயான மோதலை வேண்டுமென்றே தீவிரப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த மோதலில் பிரிட்டனின் ஈடுபாடு எந்தளவுக்கு ஆழமாகிறதோ, அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரிட்டன், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் உக்ரைனுக்கு தொடர்ந்து துணை நிற்போம் என்று தெரிவித்துள்ளது.

கலிஃபோர்னியா கடற்கரையில் அலைகளில் சிக்கிய சிறுவன்

கலிஃபோர்னியா கடற்கரையில் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது இந்திய வம்சாவளி சிறுவனை காப்பற்றிய 16 வயது பயிற்சி உயிர்காப்பாளரை அதிபர் டிரம்ப் நேரில் அழைத்து பாராட்டினார். கடந்த ஜூலை 25 ம் தேதி கலிபோர்னியாவின் சாண்டா குரூஸில் உள்ள சீபிரைட் கடற்கரையில், சக்திவாய்ந்த அலைகள் சிறுவன் நத்தானியேலைச் சூழ்ந்தபோது, ​​ரைடர் வில்லியம்ஸ் அவனைக் காப்பாற்றினார்.

இணையத்தில் வைரலான வீடியோவை பார்த்த டிரம்ப் வில்லியம்ஸின் வீரத்தைப் பாராட்டி அவருக்கு உயரிய குடிமகன் விருதை அறிவித்தார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், உயிர்காப்பாளர் ரைடர் வில்லியம்ஸ், மற்றும் அவரால் காப்பாற்றப்பட்ட சிறுவன் நத்தானியேல் ராய் மற்றும் அவர்களது குடும்பத்தினரை டிரம்ப் நேரில் அழைத்து பேசினார்.

மால்டாவிலிருந்து பர்மிங்காம் புறப்படவிருந்த ரயான்ஏர் விமானம்

மால்டாவிலிருந்து இங்கிலாந்தின் பர்மிங்காம் நகருக்குப் புறப்படவிருந்த ரயான்ஏர் ((Ryanair)) விமானத்தில் ஏசி வேலை செய்யாததால், பயணிகள் கடுமையான புழுக்கத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தவித்தனர்.

அதீத வெப்பத்தின் காரணமாகப் பயணிகள் சிலர் வாந்தியெடுத்தும், மயக்கமடைந்தும் விழுந்த அதிர்ச்சிச் சம்பவமும் அரங்கேறியுள்ளது. வெப்பத்தைத் தாங்க முடியாமல் பயணிகள் சிலர் தங்களது மேலாடைகளைக் களைந்ததாகவும் கூறப்படுகிறது.

அவசர மருத்துவச் சூழல் நிலவியபோதும், விமானப் பணியாளர்கள் பயணிகளுக்குக் குடிக்கக் கூட இலவசமாகத் தண்ணீர் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Related Link
200க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாட்டினர் தடுத்து நிறுத்தம்

200க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாட்டினர் தடுத்து நிறுத்தம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய Konark எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved