news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
tv

Also Watch

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

கண்டனம்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Trumph

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கை மிகவும் மோசமானது

  • ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மிகவும் மோசமாக நடந்து வருவதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் இது நல்லதல்ல என கடுமையாக எச்சரித்துள்ளார். சவூதி விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தவர்.
  • ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகச் சவூதி மேற்கொள்ளும் ராணுவத் தாக்குதலில் அமெரிக்காவும் நேரடியாக இணைவதா என்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார்.

சவுதி அரேபியாவில் எச்சரிக்கை அமைப்பு மீது கேள்வி

  • சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மீது அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு முன், மக்களுக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் வழங்கப்படாதது தற்போது சர்வதேச அளவில் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
  • சவுதி அரசு பொது எச்சரிக்கைகளை வழங்குவதை திடீரென நிறுத்தியது ஏன் என கேள்விகள் எழுந்துள்ளன. இதனால் மக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் வான் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தற்போது சர்ச்சை உருவாகியுள்ளது.

விமான நிலையம், விமானப்படைத்தளம் மீது தாக்குதல் என தகவல்

  • சவுதி அரேபியாவின் விமான நிலையம், விமானப்படைத் தளம் மீது புதிய தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில், 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
  • இந்நிலையில் மீண்டும் ஏவுகணைகளை ஏவியதாக தெரிவித்துள்ள ஹவுதி அமைப்பு சவுதியுடன் அமெரிக்கா இணைந்தால் விரைவான மற்றும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.


Related Link
இந்தியாவில் ஸ்டார்லிங்க் தடுக்கப்படுகிறதா? சீண்டும் எலான் மஸ்க்

இந்தியாவில் ஸ்டார்லிங்க் தடுக்கப்படுகிறதா? சீண்டும் எலான் மஸ்க்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெற்றி பெற்ற அல்-நஸ்ர் அணி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved