news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews இம்ரான்கானுக்கும், மனைவி புஷ்ரா பிபிக்கும் நிம்மதி உத்தரவு
tv

Also Watch

இம்ரான்கானுக்கும், மனைவி புஷ்ரா பிபிக்கும் நிம்மதி உத்தரவு

தனிமைச் சிறை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இம்ரான்கான்

இருவரையும் தனிமைச் சிறையில் வைப்பதற்கு நீதிமன்றம் தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி இருவரையும் தனிமைச் சிறையில் வைப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் இருவருக்கும், சிறை விதிகளின் படி சந்தித்து பேச உரிமை உள்ளதாகவும், அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, இருவரும் தங்கள் பிள்ளைகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசவும் அனுமதி வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்கிறேன்

சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கெய்ர் ஸ்டார்மர், தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் பாதுகாப்பு, அமைதி, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் தனது கவனத்தை செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

கெய்ர் ஸ்டார்மரின் இந்த திடீர் விலகல் முடிவை தொடர்ந்து, அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மத்திய லண்டன் நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

வெனிஸ் திரைப்பட விழாவில் ஹாலிவுட் பங்கேற்பு குறைவு

தொழில்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, இந்த ஆண்டுக்கான வெனிஸ் திரைப்பட விழாவில் ஹாலிவுட் படங்களின் பங்கேற்பு பெருமளவில் குறைந்துள்ளதாக விழா இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதனால், உலக அரசியல், சமூக மாற்றங்கள் மற்றும் சர்வதேச பிரச்சினைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களுக்கு இந்த ஆண்டு விழாவில் அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

Related Link
தண்ணீர் தொட்டிக்குள் சிக்கிய தாய் கரடி, 3 குட்டிகள் மீட்பு

தண்ணீர் தொட்டிக்குள் சிக்கிய தாய் கரடி, 3 குட்டிகள் மீட்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மமிதா பைஜூ துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல்

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved