news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவுடனான மோதலை தொடருவதில் விருப்பமில்லை
tv

Also Watch

அமெரிக்காவுடனான மோதலை தொடருவதில் விருப்பமில்லை

சையத் அப்பாஸ் அராக்சி

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சையத் அப்பாஸ் அராக்சி

ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தகவல்

அமெரிக்காவுடனான மோதலை தொடருவதில் விருப்பமில்லை என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ உடனான சந்திப்பில் ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ள அவர், வாங் யீயை நேரில் சந்தித்து வளைகுடா போர் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தார். அப்போது, இத்துடன், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஓமனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அராக்சி தெரிவித்துள்ளார்.

எனது விமானத்தை ரஷ்யா 2 முறை தாக்க முயன்றது

தாம் பயணித்த விமானத்தை ட்ரோன்கள் மூலம் ரஷ்யா 2 முறை தாக்க முயன்றதாக பகீர் தகவலை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும், நூலிழையில் தப்பித்ததாக தெரிவித்துள்ள அவர், தம்மையும், பிற உலகத் தலைவர்களையும் அச்சுறுத்துவதற்காகவே ரஷ்யா இந்த உத்தியை கையாளுவதாக குற்றம்சாட்டினார்.

நார்வே மன்னர் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றபோதும், பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியபோதும் சிசினாவ் விமான நிலையத்தில் ட்ரோன்கள் மூலம் தாக்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.

சவுதியின் F-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹௌதி?

சவுதி அரேபியாவின் F-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஹௌதி கிளர்ச்சியாளர்கள், அது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், போர் விமானம் ஏவுகணையால் தாக்கப்படும் காட்சியும், தொடர்ந்து பாலைவன பகுதியில் சிதறிக் கிடக்கும் விமானத்தின் கருகிய பாகங்களும் காட்டப்பட்டுள்ளன. அந்த விமானத்தின் வால் பகுதியில் சவுதி அரேபியாவின் தேசியக் கொடி போன்ற அடையாளமும் காணப்படுகிறது. எனினும், இது தொடர்பாக சவுதி அரேபியா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Related Link
பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சுரங்கம் சரிந்து விழுந்தது

பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென சுரங்கம் சரிந்து விழுந்தது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மந்தனாவின் சாதனையை சமன் செய்த லாரா வோல்வார்ட்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved